அல்லாஹ்வின் மேல் நல்லெண்ணம்

 

அல்லாஹுத்தஆலா நமக்கு பல விதமான நிஃமத்துகளை அருளியுள்ளான். இன்னும் அவற்றை நம்மால் எண்ணில் மட்டுப்படுத்த முடியாது…. அதாவது எண்ணில் அடக்க முடியாது என்றும் கூறுகின்றான்!!

16:18 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.  16:18.

இதனை அருள்களை அல்லாஹ் நமக்காக கொடுத்திருந்தும்… மனிதனின் குணம் குறைகளை தான் காணும் என்றபடி நமக்கல்லாத பிறருக்கு கொடுத்திருக்கும் நிஃமத்துகளை தனக்கு கொடுக்கவில்லை என்று இறைவனின் பக்கம் குறை காண்பதையே சில மக்கள் பழக்கமாக வைத்திருக்கின்றனர்.

ஆனால் தனக்கு அவன் தந்த அருள்களை நினைத்து அவனுக்காக நன்றி செலுத்த மறந்து விடுகின்றனர்.

 لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ‌ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ‏

(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்”

என்று இறைவன் கூறுவதை மறந்து வாழ்கின்றனர்.

அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் ஒரு இபாதத்  : 

عن ابي هريرة رضي الله عنه ان رسول الله صل الله عليه وسلم فا ان حسن الظن بالله من حسن العبادة

நிச்சயமாக அல்லாஹ்வை பற்றிய நல்லெண்ணம் என்பது அழகிய வணக்கங்களில் உள்ளதாகும். ( திர்மிதி )

நம்முடைய காரியங்களில் நாம் தொடங்கும் விஷயங்களோ, நாம் நினைக்கும் படியோ நடக்காமல் போனால் அல்லாஹ் இதையே நமக்கு நன்மையாக்கி வைத்திருக்கிறான் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

அப்படி நாம் நினைக்கும் அந்த நினைவே ஓர் அழகிய இபாதத் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள்.

பாவத்தை அழிக்கும் நல்லெண்ணம்  :

இப்படி நாம் இறைவனின் நட்டங்களை ” நிச்சயம் அவன் எந்த அடியாருக்கு அநியாயம் செய்பவனாக இல்லை” என்று நினைக்கும் நமது உள்ளத்தின் நினைவுகளும் நமது பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது.

قال سهل القطعي رحمه الله: رأيت مالك بن دينار رحمه الله في منامي، فقلت:
يا أبا يحيى ليت شعري، ماذا قدمت به على الله عز وجل؟ قال: قدمت بذنوب
كثيرة، فمحاها عني حسن الظن بالله رواه ابن أبي الدنيا في حسن الظن.

சுஹைல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கின்றார்கள் : நான் மாலிக் இப்னு தீனார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை கனவில் கண்டு : அபு யஹ்யா அவர்களே நீங்கள் அல்லாஹ்விடத்தில் எதை கொண்டு சென்றீர்கள் என கேட்க அவர்கள், நான் அதிகமான பாவங்களை கொண்டு சென்றிருந்தேன். ஆனாலும் அல்லாஹ்வை பற்றிய எனது நல்ல எண்ணங்கள் அவற்றை அளித்து விட்டது என்றார்கள்.

فعن جابر  رضي الله عنه  قال: سمعت رسول الله صلى الله عليه وسلم قبل
موته بثلاثة أيام يقول: «لا يموتَنَّ أحدكم إلا وهو يحسن الظن بالله عز
وجل» رواه مسلم.

ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  அறிவிக்கின்றார்கள் : நான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடமிருந்து  அவர்களின் வபாத்திற்கு 3  நாட்களுக்கு முன் சொல்ல கேட்டிருக்கிறேன் :  அல்லாஹ்வை பற்றி அழகிய எண்ணம் கொள்ளும் வரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகா மாட்டார். ( முஸ்லீம் )

எனவே நம்முடைஉள்ளது. அப்படி நாம் வைக்கும் நல்லெண்ணம் தான் நமது ஈமான்.ய ஈமான் என்பது அல்லாஹ்வின் மீது நாம் கொள்ளும் நல்லெண்ணத்தை வைத்து தான்

ودخل واثِلَةُ بن الأسْقَع على أبي الأسود الجُرَشي في مرضه الذي مات
فيه، فسلم عليه وجلس. فأخذ أبو الأسود يمين واثلة، فمسح بها على عينيه
ووجهه، فقال له واثلة: واحدةٌ أسألك عنها.
قال: وما هي؟
قال: كيف ظنك بربك؟
فأومأ أبو الأسود برأسه، أي حسن.
فقال واثلة: أبشر؛ فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «قال
الله عز وجل: أنا عند ظن عبدي بي، فليظن بي ما شاء» رواه أحمد.

வாசிலா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  அபுல் அஸ்வத் அவர்களின் மரண படுக்கையில் இருக்கும்போது காண சென்றார்கள். சென்றதும் ஸலாம் உரைத்து அமர்ந்து அவர்களின் இரு கண்கள் மற்றும் முகத்தின் மீது  மீது தடவினார்கள். பின் வாசிலா அவர்கள் : நான் ஒன்று கேட்க வேண்டும் என்று சொன்னதும் என்ன என்று கேட்க : உங்களின் இறைவனை பற்றி உங்களின் எண்ணம் எப்படி என்று கேட்க : அபுல் அஸ்வத் அவர்கள் நல்லெண்ணம் தான் என்று தனது தலையை அசைத்து சைக்கினை செய்தார்கள். அதற்க்கு வாசிலா அவர்கள் சுபச்செய்தி உண்டாகட்டும் என்று சொல்லி : நான் அல்லாஹ் சொல்வதாக  ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் :நான் எனது அடியானின் எண்ணப்படியே ஆகிவிடுகிறேன்.எனவே என்னை அவன் நினைக்கும் படி எண்ணிக்கொள்ளட்டும் என்று. (அஹ்மத் )

எனவே அல்லாஹ் நம்முடைய வாழ்நாளில் அவனை பற்றி உண்டான விஷயங்களில் நல்லவற்றையே எண்ணச்செய்து அதன் படியே வாழ்வை கடந்து முழு ஈமானுடன் உண்மையான முஃமின்களாக மரணிக்க செய்வானாக. ஆமீன் !

About Thinappuyal News