தபால் துறை ஊழியர்களின் பணிப்பகீஸ்கரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தபால் துறை சேவைகள்

இலங்கையில் தபால் துறை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் தபாலக சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக வெளிநாட்டு தபால்கள் பெருந்தொகை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குவிந்து கிடப்பதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

முத்திரை விற்பனை, கூரியர் சேவைகள், பணம் செலுத்தல் உட்பட பல்வேறு வழிகளில் தபால் திணைக்களத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.

தபால் திணைக்கள அதிகாரிகளின் பல்வேறு கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை தபால் ஊழியர்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஊழியர்கள் தொழிற்சங்க நடிவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தபால் சேவையை பாதுகாக்கவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்கும் நோக்கிலும் சேவைக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் ஊழியர்களை கேட்டுக்கொண்டார்.

 

 

About Thinappuyal News