யாழில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை

யாழ். வேலணை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பம் இன்று மாலை வேலணை பகுதியில் இடம்பெற்றுள்ளது

வேலனைணையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்றுவரும் மயூரன் மதுபன்(வயது 14) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலை விடுதியில் உள்ள மலசலக்கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், நேற்றைய தினம் தனது வீட்டிற்கு சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு இது வரை எந்த வித காரணங்களும் தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த மாணவனின் தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

About Thinappuyal News