சண்மாஸ்டர் மனைவி, பிள்ளைகள் இருவர் என மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது

375

 

ஐ.நா.விசாரணைகளுக்கு ஆவணங்களை சேர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டுவருகிறார் என்று தெரிவிக்கப்பட்ட ஆழ்வாப்பிள்ளை விஜேந்திரகுமாரின் (சண்மாஸ்டர்) மனைவி, பிள்ளைகள் இருவர் என மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இவர்கள் மூவரும் இந்தியாவுக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்குச் சென்றவேளை கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்மாஸ்டரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தனது கணவர் இந்தியாவில் உள்ளார் என்றும் அவரிடமே தாம் செல்லவிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

SAM_1040

SAM_9947-copy

SHARE