மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு அலுவலகங்கள் பிள்ளையானால் பிரதேச மட்டத்தில் தற்போது திறக்கப்பட்டு வருகின்றன.

121

 

ஜனாதிபதி மகிந்த ராஜபகஷவின் தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு அலுவலகங்கள் பிள்ளையானால் பிரதேச மட்டத்தில் தற்போது திறக்கப்பட்டு வருகின்றன.   இந்த அலுவலக திறப்பு வைபவங்களில் எச்சில் எலும்புத்துண்டுக்காக சில தமிழ் அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

தேர்தல் கடமைக்கு நியமனம் பெற்றுள்ள அதிகாரிகள் கூட தேர்தல் சட்ட விதிகள் அரசாங்க ஊழியர்களின் அரசியல் உரிமை பற்றி அறியாத முட்டாள்களாக அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளதை எமக்கு கிடைத்துள்ள இந்த படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

Kirankulam-1

ஆரையம்பதி பிரதேசத்திற்கான அலுவலகம் கிரான்குளத்தில் திறிந்து வைக்கப்பட போது பிரதேச செயலாளர்  வி.வாசுதேவன்  மங்கள தீபமேற்றுகின்றார்   இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச கல்வி அதிகாரியான கே. கந்தசாமி பிள்ளையான் , பிரசாந்தன் ஆகியோருடன் அருகில் மகிழ்வாக அமர்ந்திருக்கின்றார்.
மற்றுமோர் சம்பவம் வாகரை பிரதேச அலுவலக திறப்பு விழாவிலும் பிரசார கூட்டத்திலும் மகிந்த சிந்தனை வழங்கப்பட்டது.  பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலய அதிபர் கே. கதிர்காமநாதன் (வெள்ளை நிற அரைக் கை சேர்ட்) காணப்படுகின்றார்
இந்த பட்டியலில் போரதீவு பற்று பிரதேச கல்விப் பணிப்பாளர் கே. பாலச்சந்திரன் உட்பட இன்னும் பலர் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

உறுதிப்படுத்திய பின்னர் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.

இவர்களை வைத்து தேர்தல் மோசடி செய்வதற்கும் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம், சிறுமிகளை கடத்தி கொலை செய்தது உட்பட பாரிய குற்றச்செயல்களை புரிந்த பிள்ளையான் என்ற ஒட்டுக்குழுவின் தலைவன் திட்டமிட்டுள்ளான் என்றும் பிள்ளையானின் இந்த மோசடிக்கு இந்த தமிழ் அதிகாரிகள் துணைபோகின்றனர் என்றும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.

kirankulam-2

இவர்களின் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் இந்த படங்களுடன் தேர்தல் ஆணையாளருக்குக்கும் தேர்தல் கண்காணிப்புக்குழுவுக்கும் அனுப்பி வைக்கலாம்

 

SHARE