1980 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கீட்டின் படியே வடக்கில் தேர்தல் நடாத்தப்படும் – பஸில் ராஜபக்ஷ

113

 

1977 1977 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமையவே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கை அமைச்சரவை கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு சனத் தொகைக் கணக்கீட்டின் படியே வடக்குத் தேர்தல் நடக்கும் என்று அமைச்சர் பஸில் அங்கு கூறினார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது வடக்குத் தேர்தல் விவகாரம் சம்பந்தமாக சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க, “தற்போதுள்ள வாக்காளர் பதிவுக்கமைய வடக்குத் தேர்தல் நடத்தப்படுமானால் அதில் அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். 83 ஜூலை கலவரத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய தயாரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்புக்கமைய தேர்தல் வைக்கப்பட்டாலும் சிக்கல் ஏற்படும். எனவே, 1977 இற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமையவே தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, “சம்பிக்கவின் கூற்று பொருத்தமற்றது. அப்படியானால், 1983 ஜூலை கலவரத்தின்போது தெற்கிலிருந்து வடக்குக்கு விரட்டப்பட்ட தமிழ் மக்களின் பெயர்களும் மீண்டும் பதியப்பட வேண்டும் என்பதுடன், அவர்கள் இங்கு மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, “சம்பிக்க கூறுவதுபோல் செய்ய முடியாது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் பேச்சு நடத்தி நாம் முடிவொன்றை மேற்கொண்டுள்ளோம். அவ்வேளையில் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் இருந்தனர். 80 களில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய தேர்தலை நடத்துவதற்கு அப்போது முடிவொன்று எடுக்கப்பட்டது” எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்

– See more at: http://www.arayampathy.com/news.php?id=2107#sthash.pbP4SfML.dpuf

SHARE