ஐ.தே.க தலைமையகத்துக்கு முன்னால் பதற்றம்! இரு குழுக்கள் மோதல்

118

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சிறிகொத்தவிற்கு முன்னால் இரண்டு குழுக்களுக்கு இடையில் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சிறிகொத்தவிற்கு வெளியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

இதன்போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் சிறிகொத்த கட்சி தலைமையகத்தை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE