டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்

அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச், டி20 வரலாற்றில் முதல் வீரராக 900 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முடிவில் பின்ச் 891 புள்ளிகள் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, முத்தரப்பு டி20 தொடரில் 306 ஓட்டங்கள் (68, 172, 16, 3, 47) குவித்தார்.

இதன்மூலம், ஐ.சி.சி டி20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளை பெற்று, 4வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 900 புள்ளிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை ஆரோன் பின்ச் படைத்துள்ளார்.

About Thinappuyal News