வடக்கின் பாமசிகளின் அனுமதிப்பத்திரம் குறித்து வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய கருத்து

இலங்கையில் மருந்து உணவுக்கட்டுப்பாட்டு சட்டம் அதாவது உணவு திருத்தச் சட்டம் இருக்கிறது. இதற்குக் கீழ் தான் பாமசிகள் இருக்கிறது. அதற்கு லைசன்ஸ் வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஒரு பாமசியை வைத்திருக்க முடியாது. பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 06 மாதம் அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் அவகாசம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து நடத்தச் சொல்லி எனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை, ஏன் மத்திய சுகாதார அமைச்சுக்கும் அதிகாரம் இல்லை. பாராளுமன்றத்தில் சட்டத்தை மாற்றி செய்யலாம் எனக்கூறினால் நடத்தமுடியும். அடிப்படையானது அனுமதிப்பத்திரம். ஒரு மதுக்கடையினை ஆரம்பிக்க வேண்டும் என்றால் அனுமதிப்பத்திரம் இல்லாமல் தொடங்க முடியுமா? 06 மாதத்திற்கு நடத்தலாம். பின்னர் அனுமதிப்பத்திரம் எடுத்துக்கொள்ளலாம் என்றால் யாரும் அதற்கு அனுமதி வழங்கமாட்டார்கள்.
06 மாதம் அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓடட்டும். 06 மாதத்திற்கு பின்னர் எடுக்கலாம் என பஸ் ஒன்றினை செலுத்தமுடியுமா? உயிரைக் காக்கின்ற மருந்துகளை அனுமதிப்பத்திரம் இல்லாமல் விற்கலாமா?

முதலாவது அனுமதிப்பத்திரம் இருக்கவேண்டும். இரண்டாவது பாமசிஸ்ட் இருக்கிறாரா என சுகாதார அமைச்சு ஒழுங்கான முறையில் கன்காணிக்கவேண்டும். மருந்துச்சீட்டு இருக்கா? அல்லது சும்மா வாயால் கேட்டுக் கொடுக்கிறார்களா எனப் பார்க்கவேண்டும். இதில் அஸ்திவாரம் என்ன? அனுமதிப்பத்திரம் தானே. 09-10 வருடங்களாக பாமசிகள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்குகிறது. அதில் மருந்துகள் சரியான வைத்தியர்களின் ஆலோசனை இல்லாமல் கொடுப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து வெளியில் யாருக்கும் தெரியாது. தெரிந்தால் தானே இதன் மூலம் எங்களுக்கு என்ன ஏற்பட்டிருக்கிறது. யார் வருகிறார்கள்? என்ன மருந்தை தருகிறார்கள்? என்ன பக்கவிளைவு ஏற்படுகிறது என்பது குறித்து தெரியவரும். முறைப்பாடுகள் வராமல் இருந்தால் எதுவும் கண்டுபிடிக்கமுடியாமல் போய்விடும். முறைப்பாடு வந்துவிட்டால் நடவடிக்கை இருக்கிறது. முல்லைத்தீவில் மாத்திரமல்ல. யாழிலும் ஒரு பாமசி. முறைப்பாடு வந்துவிட்டால் அதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். யாழில் ஒரு பாமசி அனுமதிப்பத்திரம் இல்லை. மருந்துகள் சும்மா வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டிருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருமாறு கேட்கப்பட்டிருக்கிறது. அந்தப் பாமசியும் அனுமதிப்பத்திரம் எடுக்காதவரைக்கும் இயங்கமுடியாது.

அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கு பத்திரங்களை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் ஒரு பாமசிஸ்ட் உடைய கடிதத்துடன், இவர் தான் செய்யப்போகிறார் என கொண்டுவந்து கொடுக்கும் போது அதில் எதுவும் சுணக்கம் வந்தால் உடனடியாக என்னைத் தொடர்புகொள்ளலாம். அனுமதிப்பத்திரத்துடன் பாமசியை உருவாக்கிக்கொடுக்கவேண்டும். ஏனெனில் சில மக்களுக்கு உண்மையாக வைத்தியரின் அனுமதிச் சீட்டுடன் போனாலும் மருந்துவேணுமே. எனவே பாமசிகளை சட்ட ரீதியான அனுமதி பெற்று திறக்கவேண்டும். அனுமதிப்பத்திரம் எடுக்கும் பொறிமுறையினை அவர்கள் ஆரம்பிக்கவேண்டும். தேவையான ஆவணங்களுடன் Social Service Sceretaryயிடம் கொடுக்கட்டும். அவர்தான் அதற்குரிய வேலை செய்பவர். அவர் சரியென ஆவணங்களை உறுதிப்படுத்தினால் பின்னர் RDHS இற்கு போகும். பின்னர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

வவுனியாவில் 19 பாமசி இருக்கிறது. 10இற்கு அனுமதிப்பத்திரம் இருக்கிறது. 09இற்கு அனுமதிப்பத்திரம் இல்லை. அனுமதிப்பத்திரம் இல்லையெனில் இயங்க அனுமதி வழங்கமுடியாது. முறைப்படி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அவர்களுக்கென ஒரு கடமை இருக்கிறது. அந்த கடமையை அவர்களை செய்யச்சொல்லி சொல்லியிருக்கிறோம். அதனை அவர்கள் செய்யாதுவிடின் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

யாழ்ப்பாணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. யாழில் 80 பாமசிகள் இருக்கிறது. அதில் 10-12 இற்கு அனுமதிப்பத்திரம் இல்லை என நினைக்கிறேன். அவற்றில் சில அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். சிலர் இன்னமும் அதனைச் செய்யவில்லை. DCCயில் நான் கேட்டேன். 06 மாதம் இயங்கலாம் என எனக்கு எழுத்தில் தாருங்கள் என்று. நான் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கிறேன் என்று. அதனை அவர்கள் தரவில்லை. சட்டத்திற்கு இவை முரணானவை. அரசாங்கத்தின் சட்டம் அனுமதிப்பத்திரம் தேவை என்பதுதான். ஒரு கிழமைக்குள் வடமாகாணத்தில் உள்ள பாமசிகள் தொடர்பாக முழு தகவலும் எனது கைக்கு வந்திருக்கிறது. DCCயில் கதைக்க முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விடயத்தினை DCCயில் கதைக்கமுடியாது. இதற்கு DCCயின் இணைத்தலைவர்கள் தான் பதில் கூறவேண்டும். ஏற்கனவே ஒரு சில பாமசிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் பதியப்பட்டிருக்கின்றது. நீதிமன்றத்தில் இருக்கும் விடயங்களை கதைக்கமுடியாது என நினைக்கிறேன்.

ஆயுள்வேதை வைத்தியர்கள், திணைக்களம் தொடர்பாகவும் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. எந்தப் பிரச்சினையையும் ஒரு கௌரவமாகவே கையாளவேண்டும். மாவட்ட ரீதியாக அவர்களை அழைத்து ஒரு சந்திப்பு வைக்கவுள்ளோம். எதுவாகவிருந்தாலும் அவர்கள் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட்ட வைத்தியர்கள். அரசினால் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகள். சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டவர்கள் தான் இயங்கமுடியும். அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட பாமசி மாத்திரமல்ல எதுவும் செய்ய இயலாது. அங்கு செல்லும் மக்களுக்கு மருத்துவம் தொடர்பாக பூரண தெளிவு கிடையாது. அவர்கள் வைத்தியர்களை நம்பி செல்கிறார்கள். மருத்துவம் படித்ததால் தான் அவர்களிடம் செல்கின்றார்கள். தாதியர் ஒருவர் படித்தவர் என்பதால் தான் அவரிடம் செல்கின்றோம். இதையே எல்லோரும் செய்யலாம் என்றால் ஒருவரும் மருத்துவம் தொடர்பாக படிக்கத்தேவையில்லை. ஏன் ஒரு நடைமுறை வைக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த படிப்புகளை மேற்கொண்டவர்கள் மாத்திரம் தான் சில வேலைகளைச் செய்யமுடியும். பாமசிகள் அதிகரிக்கப்படவேண்டும் என்கிற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பாமசிகளுக்கான கேள்வி அதிகரிக்கும். அப்படி வரும்போது உயர்தரத்தில் விஞ்ஞானம் படித்தவர்கள் பாமசியை படிக்கவேண்டும். தாங்களே ஒரு பாமசியை தொடங்கவேண்டும். வருமானம் வரும். ஒரு தட்டுப்பாடு வரும்போதுதான் எல்லோரும் படிப்பார்கள். மருத்துவர்கள் காணாது என்பதற்காக கர்ப்பிணித் தாய்மார்களோ அல்லது சிறுவர்களையோ, வயோதிபர்களுக்கோ பக்கவிளைவுகள் அறியாத ஒருவர் மருந்து வழங்கமுடியாது. வைத்தியசாலைகளில் நிறைய மருந்துகள் இருக்கிறது. வைத்தியசாலைகளில் குறிப்பிட்ட ஒரு தரத்தில் இறக்குமதி செய்யப்படுவது மாத்திரம் தான் இருக்கும். அநேகமான 90மூமான மருந்துகள் இருக்கும். சில மருந்துகள் மாத்திரம் அங்கு இருக்காது. இல்லாத அந்த மருந்துகளை வைத்தியர் சீட்டில் எழுதிக்கொடுப்பார்.

மருந்துப்பொருட்களுடைய Pharmagolical Name மாத்திரம் தான் எழுதமுடியும் என்று வரப்போகிறது. அதாவது மருந்துப்பொருட்களுக்கு Tread Name, Pharmagolical Name என இரண்டு பெயர் இருக்கிறது. Tread Name எழுதினால் ஒரு ஒரு கம்பனியும் ஒரு பெயரைப் போட்டிருக்கும். அப்போ நாங்கள் கம்பனியைப் முன்னிலைப்படுத்தவில்லை. மருந்தினைத் தான் சரியாக எழுதவேண்டும். கம்பனிக்கு சார்பாக எழுதக்கூடாது என்பதற்காகத்தான் Tread Name எழுதக்கூடாது என்று வரப்போகின்றது.

சில மருந்துகள் இல்லாதுபோனால் தான் சீட்டில் எழுதி கையெழுத்தினை இட்டு வைத்தியர்கள் வெளியில் வாங்குமாறு தருகிறார்கள். றப்பர் முத்திரை சீட்டில் கட்டாயம் இருக்கவேண்டும். இதனைப் பார்த்துத்தான் வெளியில் மருந்துகளைக் கொடுக்கவேண்டும். முல்லைத்தீவில், யாழில், மன்னாரில் அடிப்படையான மருந்துகள் இருக்கிறது. சில மருந்துகளை வெளியில் தான் வாங்கவேண்டும். இம்மாதிரியான மருந்துகள் வைத்தியசாலைக்கு வராது. அதனை இவர்கள் சரியான முறையில் எழுதி கொடுத்துவிடவேண்டும் என்று தெரிவித்தார்.

About Thinappuyal News