புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட Finger Print உருவாக்கம்

விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட Finger Print இனை உருவாக்கியுள்ளனர்.

இதனை மொபைல் சாதனங்களில் கடவுச் சொல்லாக பயன்படுத்த முடிவதுடன், பயனர்களின் உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம் என்பவற்றினையும் அறிந்துகொள்ள முடியும்.

இதற்காக மீள்தன்மை மற்றும் ஒளி ஊடுபுகவிடக்கூடிய வகையில் குறித்த Finger Print ஸ்கானர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை தென்கொரியாவில் உள்ள Ulsan National Institute of Science and Technology இல் பணியாற்றும் விஞ்ஞானிகளே வடிவமைத்துள்ளனர்.

தற்போது பாவனையில் உள்ள பொத்தான் வடிவிலான Finger Print ஸ்கானரை விடவும் புதிய தொழில்நுட்பமானது பயன்படுத்துவதற்கும் இலகுவாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

About Thinappuyal News