யூடியூப் சேனலுக்காக ரிஸ்க் எடுத்த இளைஞர்கள் உயிரிழப்பு.!

உலகின் பிரபல வீடியோ ஷேரிங் தளமாக யூடியூப் இருக்கிறது. ஒரு வீடியோவை பார்க்க துவங்கினால் குறைந்தபட்சம் சில மணி நேரங்களை  காவு வாங்கி, உங்களை தொடர்ந்து வீடியோ பார்க்க தூண்டும் தளமாகவும் யூடியூப் இருக்கிறது. ஆனாலும் இந்த யூடியூப் சேனலுக்காக ரிஸ்க்  எடுத்த சில இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது.

கடந்த 3-ம் தேதி அன்று கனடாவில் இருக்கம் ஷானன் நீர்வீழ்ச்சியில், பிரபல ‘ஹை ஆன் லைஃப்’ என்ற யூடியூப் சேலுக்காக ஒரு ரிஸ்க் வீடியோவை எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் 1பெண் எதிர்கபாராத விதமாக வழுக்கி வழுந்து உயிரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹை ஆன் லைஃப்:

குறிப்பாக உலகின் அழகான மற்றும் அதே நேரத்தில் ஆபத்தான பகுதிகளுக்குச் சென்று சாகசங்கள் நிகழ்த்துவது இந்த ‘ஹை ஆன் லைஃப்’ சேனலை சேர்ந்த இளைஞர்களின் வழக்கம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு பார்வையாளர்களை கொண்டுள்ளது இவர்களது யூடியூப் சேனல்.

ஆபத்தான பகுதிகள்:

மேலும் இந்த இளைஞர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு சென்று சாகசங்கள் நிகழத்துவது வழக்கம், அதன்படி அவர்கள் நிகழ்த்தும் சாதனைகளை வீடியோ எடுத்து தங்களது யூடியூப் சேனலில் அப்லோட் செய்வது மட்டுமே முழு நேர வேலையான வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்க்கது.

ஷானன் நீர்வீழ்ச்சி:

இந்த ‘ஹை ஆன் லைஃப்’ சேனலுக்கு வேண்டி மேகன் ஸ்க்ரேப்பர், ரைகர் கேம்பல், அலெக்ஸி லியாக் என்ற இளைஞர்கள் கனடாவில் இருக்கும் ஷானன் நீர்வீழ்ச்சியில் ஒரு அபாயகரமான டைவிங்கிற்கு தயாரிகி வந்துள்ளனர்.

நீர்வீழ்ச்சிக்குள் குதித்துள்ளனர்:

ஆனால் அந்தசமயம் எதிர்பாராத விதமாக மேகன் ஸ்க்ரேப்பர் நீர் வீழ்ச்சிக்குள் வழுக்கி விழுந்துள்ளார், அவரை காப்பாற்ற ரைகர் மற்றும் அலெக்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து நீர்வீழ்ச்சிக்குள் குதித்துள்ளனர், இதையடுத்து மூன்று பேரும் நீர்வீழ்ச்சியின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

 

 

About Thinappuyal News