வசுதரன் சுவிஸ்குமாரோ அல்லது பாலியல் படம்பிடித்து விற்பனை செய்பவர் அல்ல, இவர் இரக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வு கொடுப்பவர் பொலிஸாரின் கண்களுக்கு மண்ணைத்தூவிய புத்திசாலி.

 

3 கலியாணம்!! ஒரு மனைவி பிரித்தானியாவில்..!, ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில்..!, ஒரு மனைவி வவுனியாவில்: குழந்தை கடத்தல்காரனின் லீலைகள்!!- (வீடியோ)

இவரது முதல் மனைவி பிள்ளைகள் இரண்டாவது மனைவி அவரது வளர்த பிள்ளைகளின் புகைப்படங்களும் எம்மிடம் இருக்கிறது அதனையும் நாம் ஊடக தர்மம் கருதி வெளியிடவில்லை.

கடத்தப்பட்ட குழந்தையின் தாய் மோனிஷாவும், தந்தை வசூதரனும் முரண்பாடு காரணமாக தற்போது சுமூகமற்ற உறவில் உள்ளனர். அவர்களிற்கிடையில் என்ன பிரச்சனை?

இவ்விபகாரம் தொடர்பாக EPDP  உறுப்பினர்கள் தலையிட்டதால் அவர்களின் செயல்பாடுகளை வன்னி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ;ஆகவே யார் தலையிட்டாலும் கடத்தியது தவறு தான் அதற்காகக் குறித்த பிள்ளையின் தாயை நல்லவர் என்றும் நாம் கூற வரவில்லை வெளிநாட்டு மோகம் கொண்டு ஆசைப்பட்டதன் விளைவே இதற்கான முக்கிய காரணம். வடக்கு கிழக்கில் வாழுகின்ற எமது பெண் பிள்ளைகள் பணத்திற்கு ஏமாந்து இப்படிப்பட்ட காமுகர்களின் நயவஞ்சகத்தனத்திற்கு ஏமாந்து விடாதீர்கள். இந்த காமுகனின் பாலியல் வீடியோக்கள் எமது ஊடக நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது ஊடக தர்மம் கருதி நாம் அதனை வெளியிடவில்லை.

அடுத்து இந்த கடத்தல் காரர் ஒரு திறமைசாளி இவ்வாறன கடத்தல் சம்பவம் ஒன்றை திறம்பட நடாத்தி பொலிஸின் முகத்தில் கரி பூசியுள்ளார். தற்போது கோட்டில் இதற்க்கான வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில் பிள்ளையின் தாயுடைய ஆபாச படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுடன் உள்ளாசமாக இருந்த வேளை அதனை படம்பிடித்து தற்போது இதனை வெளியிட்டுள்ளார். இந்தக் காமுகன் இவருடைய மற்றுமொரு தொழிலாக பெண்களுக்கு ஆசைவார்த்தை காட்டி பணங்களை அள்ளிக்கொடுத்து இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, அதன் ஆபாச வீடியோக்களை சுவிஸ்குமார் போன்று விற்று பணம் சம்பாதிப்பது தான். கூடுதலாக கன்னி கலையாத பெண்களையே வலையில் வீழ்துவார். முதலாவது பெண் பிள்ளைகளின் தாய்மாருடன் உல்லாசம் அனுபவித்து பின்னர், அவர்களை மிரட்டி உனது மகளை எனக்கு திருமணம் செய்து தராவிட்டால் உனது அந்தரங்கங்களையும் வெளியிடுவேன் என்பதே இவர் பாணி.

வவுனியாவில் கடந்த 31-05-2018 கடத்தப்பட்ட வானிசன் என்ற 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட நிலையில் இன்று 02-06-2018 இரவு 8.30மணிக்கு தாயும் சேயும் வவுனியாவிற்கு பொலிஸாரால் அழைத்து வரப்பட்டனர்.

வவுனியா குட்செட் வீதியில் மர்ம கும்பல் ஒன்றினால் கடந்த 31.05.2018- அதிகாலை முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி வந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 08 மாத குழந்தையை கடத்திச் சென்றனர். சினிமா பாணியில் இந்த கடத்தல் நடந்தது.

குழந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து குழந்தையை மீட்டுள்ளனர் பொலிர்.

இந்த கடத்தல் ஏன் நடந்தது? இதன் பின்னணி என்ன?- இதையெல்லாம் தமிழ்பக்கம் ஆராய்ந்தது.

இதன்போது, ஒரு அதிர்ச்சிகதையே பின்னணியில் இருப்பது தெரிந்தது.

கடத்தப்பட்ட எட்டு மாத குழந்தையான வானிசனின் தாய், தந்தைக்கிடையில் இருந்த குடும்ப சிக்கலே இந்த கடத்தல் நடக்க காரணமாக இருந்துள்ளது.

கடத்தப்பட்ட குழந்தையின் தாய் மோனிஷாவும், தந்தை வசூதரனும் முரண்பாடு காரணமாக தற்போது சுமூகமற்ற உறவில் உள்ளனர். அவர்களிற்கிடையில் என்ன பிரச்சனை?

2013ஆம் ஆண்டு மோனிஷா 17 வயதாக இருந்தபோது, பிரித்தானியா செல்வதற்கு முயற்சித்தார். அங்குள்ள அவரது உறவினர்கள் மூலமே இந்த ஏற்பாடு நடந்தது.

இந்த சமயத்தில், இலண்டனில் இருந்த ஆசைப்பிள்ளை வசூதரன் என்பவனின் உதவியையும் நாடியுள்ளார் மோனிஷாவின் உறவினர். வசூதரனின் மகள் என கூறி, பிரித்தானியாவிற்கு அழைப்பதற்கான முயற்சிகள் நடந்தன.

இதற்காக மோனிஷாவை இந்தியாவிற்கு அழைத்தார் வசூதரன். அங்கிருந்துதான் சுலபமாக விசா பெற்று செல்லாமென கூறினார். தனது மூத்த சகோதரியுடன் இந்தியாவிற்கு கிளம்பி சென்றார் மோனிஷா.

வசூதரனும் இந்தியா வந்தார். அங்கிருந்து பிரித்தானியா செல்வதற்கு முயற்சிகள் நடந்தபோது, அவர்கள் இந்தியாவில் சில காலம் தங்கியிருந்தனர்.

இந்தியாவில் தங்கியிருந்தபோது, வசூதரனிற்கும்- மோனிஷாவிற்குமிடையில் நெருக்கம் ஏற்பட்டு, அது காதலானது.

மோனிஷா அப்பொழுது 17வயதானவர். வசூதரனுக்கு அவரைவிட 20 வயது அதிகம்.

பின்னர், மோனிஷாவின் பிரித்தானிய பயண திட்டம் சரிவரவில்லை. அதனால் சில காலத்திலேயே மீண்டும் சகோதரியுடன் வவுனியாவிற்கு திரும்பி வந்தார்.

மோனிஷா வவுனியாவிற்கு சென்றாலும், அவரை விடாமல் துரத்தி காதலித்தான் வசூதரன். அடிக்கடி தொலைபேசியில் தொடர்பேற்படுத்தி காதலை வளர்த்தான். காதல் வளர்ந்தது.

இந்த இரகசிய காதலை மோனிஷாவின் குடும்பத்தினர் மீண்டும் கண்டறிந்து விட்டனர். மோனிஷாவை கண்டித்து, அவரை . இதை எப்படியோ மோப்பம் பிடித்த மோனிஷாவின் பெற்றோர், அந்த காதலிற்கு தடைவிதித்தனர்.

அப்போது வசூதரனை உயிருக்குஉயிராக காதலித்து வந்தார் மோனிஷா. அதனால் பெற்றோரின் கட்டுப்பாட்டை அவரால் ஏற்கமுடியவில்லை. எப்படியோ, வீட்டுக்கு தெரியாமல் வசூதரனிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, தனது நிலைமை கூறியிருக்கிறார்.

வசூதரனின் ஏற்பாட்டின்படி, குடும்பத்தினர் சித்திரவதை செய்கிறார்கள் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார் மோனிஷா. அத்துடன், யாழ்ப்பாணம் உரும்பிராயில் வீடொன்றை ஏற்பாடு செய்து, மோனிஷாவை அங்கு தங்க வைத்தார்.

வயதுக்கோளாறில் வசூதரனின் பேச்சை கேட்டு, தன்னை ஆளாக்கிய தாய், சகோதரி, சகோதரனை பிரிந்து யாழ்ப்பாணம் வந்தார். உரும்பிராயில் மோனிஷா தங்கியிருந்தபோது, தேவையான பணத்தை வசூதரன் அனுப்பியுள்ளான்.

இப்படியே இருந்தால் எப்படி என யோசித்த வசூதரன், 2015 இல் மோனிஷாவை இந்தியாவிற்கு அழைத்து தாலி கட்டி, மனைவியாக்கினான். திருமணத்தின் பின்னர் பல தடவைகள் பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த வசூதரன், மோனிஷாவையும் அங்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளான். இதனால் மோனிஷா கர்ப்பம் தரித்தார்.

 

மோனிஷா கர்ப்பவதியானதும், அவரது பெற்றோருடன் சுமூகமான உறவு ஏற்பட்டது. அனைவரும் வவுனியாவில் ஒன்றாக இருப்பதென முடிவெடுத்து, வீடொன்றை வாடகைக்கு பெற்று வசித்தனர். 2017 ஒக்ரோபரில் மோனிஷா வானிசனை பெற்றெடுத்தார்.

வானிசன் பிறந்த சில மாதங்களில்தான் வசூதரனின் மன்மத வித்தைகளை அவர் அறிந்தார். வசூதரனிற்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது, ஒரு மனைவி பிரித்தானியாவில், ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். மோனிஷாவை விட 5 வயது குறைவான பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இதனால் விரக்தியடைந்த மோனிஷா, வசூதரனுடன் கடுமையான சண்டை பிடித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் முரண்பாடு உருவானது.

இதன்பின் சிறிதுகாலம் கழித்து, மீண்டும் மோனிஷாவிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி வானிசனை தனக்கு காட்டுமாறு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். முன்னர் செய்த இரண்டு திருமணங்களை மறைத்ததால் பிள்ளையை காட்ட மோனிஷா மறுத்து வந்தார்.

மோனிஷாவை பழிவாங்கும் நோக்கத்துடன், வவுனியாவுடன் தொடர்புடைய முகப்புத்தகக பக்கமொன்றை உருவாக்கிய வசூதரன், மோனிஷாவுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்களில் தனது படங்களை மறைத்துவிட்டு வெளியிட ஆரம்பித்தார்.

34147921_838609733010922_3974255138750595072_n 3 கலியாணம்!! ஒரு மனைவி பிரித்தானியாவில்..!, ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில்..!, ஒரு மனைவி வவுனியாவில்: குழந்தை கடத்தல்காரனின் லீலைகள்!!- (வீடியோ) 34147921 838609733010922 3974255138750595072 n

இந்தபடங்களை மேலும் சில இணையத்தளங்களில் வெளியிட முயன்றும் வந்தார். அதுமட்டுமல்லாமல், திருகோணமலையை சேர்ந்த தனது இரண்டு நண்பர்களை அனுப்பி, ‘பிள்ளையை விரைவில் தூக்குவோம்’ என்று அச்சுறுத்தியுள்ளார். அத்துடன், தனது மூத்த சகோதரியின் மகனையும் வசூதரன் அனுப்பி அச்சுறுத்தியுள்ளார்.

இந்த சமயத்தில் மோனிஷா குடும்பம் வசித்த வாடகை வீட்டில் திருத்த வேலைகள் செய்ய வீட்டின் உரிமையாளர் தீர்மானித்திருந்தார். அதனால் அதேகாணியில்- அந்த வீட்டிற்கு பின்புறமிருந்த வீட்டில்- அவர்களை தங்க வைத்தார்.

இந்த நிலையில் 31.05.2018 அன்று இரவு 2.05 மணியளவில் 22 தொடக்கம் 25 வயது மதிக்கத்தக்க மூவர் முகத்தை நன்றாக மறைத்தபடி மதில்பாய்ந்து வீட்டு வளவிற்குள் நுழைந்துள்ளனர். மோனிஷா குடும்பம் முன்னர் வாழ்ந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

அந்த வீட்டில் வேலை செய்பவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். 52 வயதான ஒருவரை அழுத்திப்பிடித்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து, பிள்ளை எங்கே என விசாரித்துள்ளனர்.

மற்றையவர்களை எழும்ப விடாமல் மரம் அரியும் வாளை வைத்து அச்சுறுத்தியுள்ளனர். அங்கு பிள்ளையில்லையென தெரிந்ததும், அந்த வீட்டிற்கு பின்புறம் இருந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.

வீட்டை பூட்டிவிட்டு மோனிஷா குடும்பம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த குண்டர்கள், 08 மாத குழந்தையான வானிஷனை தூக்கிக்கொண்டு தப்பியோடி சென்றனர். அவர்கள் முகத்தை மூடிக்கட்டியிருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

இந்த சம்பவம் முடிந்து அதிகாலை 02.25 ஆன போது, வசூதரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மோனிஷா அழுது கொண்டிருக்கும் சத்தத்தை கேட்ட பின்னர் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டான்.

உடனடியாக பொலிஸாரிற்கு தகவல் கொடுக்கப்பட்டு, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தடயவியல் பொலிஸாரும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
கடத்தல் தொடர்பாக பல கோணங்களில் விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார், வசூதரனின் சகோதரியின் மகனையும் விசாரணைக்கு உள்ளாக்கியிருந்தனர்.

இதன்பின்னர் வவுனியா பொலிஸாருக்கு இலக்கத்தை மறைத்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பொன்றை வசூதரன் ஏற்படுத்தி பேசியுள்ளான். வானிஷனை நான்தான் கடத்தியுள்ளேன், மூன்று நாளின் பின் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறி தொலைபேசியை துண்டித்துள்ளான்.

தற்போது புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட நிலையில் 02-06-2018 இரவு 8.30மணிக்கு தாயும் சேயும் வவுனியாவிற்கு பொலிஸாரால் அழைத்து வரப்பட்டனர்.

குழந்தையையும் தாயையும் பார்வையிட்ட வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.எம்.எஸ்.எம் தென்னக்கோன், அவர்களுடன் அளவளாவியதுடன், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்திருந்தார்.

குழந்தையுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் இரு பெண்களையும் குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:

கடத்தல் சம்பவம் இடம்பெற்றதையடுத்து வன்னி பிரதிபொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டு வாகன சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில்  குழந்தையையும் சந்தேக நபர்களையும் மீட்டுள்ளோம். அத்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

 

unnamed 3 கலியாணம்!! ஒரு மனைவி பிரித்தானியாவில்..!, ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில்..!, ஒரு மனைவி வவுனியாவில்: குழந்தை கடத்தல்காரனின் லீலைகள்!!- (வீடியோ) unnamedIMG-7815b8b7cbb86fd30d02d6d6c05a8e70-V 3 கலியாணம்!! ஒரு மனைவி பிரித்தானியாவில்..!, ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில்..!, ஒரு மனைவி வவுனியாவில்: குழந்தை கடத்தல்காரனின் லீலைகள்!!- (வீடியோ) IMG 7815b8b7cbb86fd30d02d6d6c05a8e70 VIMG-b7bb91fe86fa153027203e98a59cabc7-V 3 கலியாணம்!! ஒரு மனைவி பிரித்தானியாவில்..!, ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில்..!, ஒரு மனைவி வவுனியாவில்: குழந்தை கடத்தல்காரனின் லீலைகள்!!- (வீடியோ) IMG b7bb91fe86fa153027203e98a59cabc7 V

உண்மைகள் தொடரும்;;………….