ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்

நாட்டின் புகழ்பெற்ற இராஜதந்திர அதிகாரியான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தனது 74 ஆவது வயதில் இன்று காலை காலமானார்.

அந்நார், சட்டவாட்சி மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாக்க அரும்பாடுபட்ட ஒருவராவார்.