விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
பாடலில் கண்சிமிட்டி இந்தியா முழுவதும் பிரபலமானவர், பிரியா வாரியர்.
ஒரு ‘அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலராய பூவி பாடலில் இந்த கண்சிமிட்டும் காட்சி இடம்பெற்று இருந்தது. ஒரே பாடலில் முன்னணி கதாநாயகிகளையெல்லாம் சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பின்னுக்கு தள்ளினார். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. ஒரு அடார் லவ் வெளியான பிறகே அடுத்த படங்களை ஏற்கும் முடிவில் இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கில் வெளியிட அதிக தொகைக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக கூறுகின்றனர். மாணிக்ய மலராய பாடல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

மத உணர்வுகளை புண்படுத்துவதாக பிரியா வாரியர் மற்றும் இயக்குனருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அவை தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் பிரியா வாரியருக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இப்போது இன்னொரு பெரிய கம்பெனி அவரை அணுகி உள்ளது. இதில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள முன்னணி நடிகைகள் இன்னும் ரூ.1 கோடி சம்பளத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News