கிளிநொச்சியில் சில ஆசிரியர்கள் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் இன்றைய ஜந்தாவது அமர்வில் ஆசிரியைகளின் சாரி சட்டை தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பு உறுப்பினர் அ. சத்தியானந்தனால் பாடசாலை மாணவர்கள் சிகை அலங்கரிப்பு தொடர்பில் கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டும் என்ற பிரேரணையின் போது கருத்து தெரிவிக்கையில் சில உறுப்பினர்கள் ஆசிரியைகளின் சேலை சட்டை தொடர்பிலும் தங்களின் ஆட்சேபனையை தெரிவித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் விக்ரர் சாந்தி ஆசிரியயைகளின் சேலை சட்டைகள் மிக மோசமாக காணப்படுகிறது. எனது வட்டாரத்தில் உள்ள பாடசாலையிலும் இளம் ஆசிரியைகள் இவ்வாறு சாறி சட்டை அணிந்து வருகின்றார்கள் இதனை நான் நேரில் அவதானித்திருக்கிறேன்.

அவர்கள் அணிந்து வருகின்ற சேலை சட்டை உண்மையிலேயே பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. நான் கூட அவர்களிடம் கேட்டிருக்கிறேன் நீங்கள் இவ்வாறு சாறி சட்டை அணிந்து வருகின்றீர்கள் உயர்தர மாணவர்கள் உள்ளனர் அவர்கள் உங்களை பார்த்து ஏதேனும் சொல்லமாட்டார்களா? என வினவிய போது அதற்கு அவர்கள் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

எனவேதான் மாணவர்களை கலைகலாசார பண்பாடுகளோடு வளர்த்தெடுக்க வேண்டுமானால் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உறுப்பினர் ஜீவராசா குறிப்பிட்ட விடயத்தை நானும் பல ஆசிரியர்களை பார்த்திருகிறேன் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக உறுப்பினர் ஜீவராசாவும் ஆசிரியைகள் மோசமான முறையில் சேலை அணிந்து பாடசாலைக்கு வருகின்றனர் எனத் தெரிவித்த போது உறுப்பினர் செல்வராணி அதற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். இக் கருத்து பெண்களை அவமானப்படுத்துவது போன்றுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

About Thinappuyal News