2018 ரஜினி சாதனை வருடமாக மாறியது- எப்படி தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். தன்னுடைய படங்கள் மூலம் புதிதாக பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் செய்து கலக்குகிறார்.

ரஜினி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் படம் இவ்வருடம் நவம்பர் 29ம் தேதி வெளியாகிறது என்ற ஒரு அதிரடி தகவலை கூறி குஷிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

இந்த வருடத்திலேயே ரஜினி நடித்த 2 படங்கள் வருகிறது. கடந்த 23 வருடங்களில் ஒரே வருடத்தில் ரஜினியின் 2 படங்கள் வந்தது இல்லையாம். கடைசியாக அப்படி 1995ம் ஆண்டு தான் ரஜினி நடித்த பாட்ஷா, முத்து வெளியாகி இருக்கிறது.