இனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்

இனி வாட்ஸ்அப் மெசேஜை ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள்

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அப்டேட் மெசேஜ் ஃபார்வேர்டு செய்யப்படுவதை சுட்டிக்காண்பிக்கிறது. இதனால் உங்களுக்கு வரும் குறுந்தகவல்கள் உண்மையாக டைப் செய்யப்படுகின்றதா அல்லது மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
கடந்த மாதம் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் காணப்பட்ட இந்த அம்சம் உங்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் வரும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களில் ஃபார்வேர்டெட் (forwarded) என்ற குறியீடு இடம்பெறும். தற்சமயம் இந்த அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது.
புதிய அம்சம் மூலம் செயலியில் பரப்பப்படும் போலி செய்திகளை குறைக்க இது காரணமாக இருக்கும். கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் (suspicious link detection) அம்சம் சோதனை செய்யப்படுவது தெரியவந்தது.
இந்த அம்சம் மூலம் வாட்ஸ்அப்-இல் பரப்பப்படும் இணைய முகவரிகள் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும். இதை கொண்டு போலி தளங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் வலைதளங்களை பயனர்கள் மிக எளிமையாக கண்டறிந்து கொள்ள முடியும்.
புதிய ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சத்தை பெற உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.