மார்பக புற்றுநோயிடமிருந்து முழுமையாக பாதுகாக்க இந்த ஒரு இயற்கை பொருள் போதும்!

மாதுளையை நாம் தினம்தோறும் கடைகளில் பார்க்கிறோம். சிலசமயம் உண்ணவும் செய்கிறோம். பழங்கள் என்றாலே சத்தானவை எனவே அதை சாப்பிட வேண்டும் என அதனை ஒரு கடமையாகவே பெரும்பாலனோர் செய்கிறோம்.

மாதுளம் பழம் சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. ஆனால் அதன் மற்ற பயன்கள் குறிப்பாக மாதுளை மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடும் என்பது பலரும் அறியாத ஒன்று.

மார்பக புற்றுநோயை தடுக்கும்

மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் மார்பக புற்றுநோயை வராமல் தடுக்கவும் மேலும் மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகிறது.

இதில் உள்ள எலாஜிடேன்னிஸ் உடலுக்கு தேவையான ஈஸ்ட்ரோஜனை அதிகளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.

மேலும் மார்பக புற்றுநோய் செல்கள் அதிகரிப்பதையும் தடுக்கிறது. எலாஜிடேன்னிஸ்ஸிலிருந்து உருவாக்கப்படும் யூரோதிலின் -பி மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கிறது.

இதனால், அடிக்கடி மாதுளம் பழம் வாங்கி சாப்பிடுங்க.