ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள அதிரடி தீர்மானத்தை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாற்ற முற்படக் கூடாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே  ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(12) நடைபெற்ற  பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

சமூகத்தின் பாதுகாப்பு கருதி தூக்குத் தண்டனை வழங்கும்  ஆவணத்தில் இறுதி ஒப்பமிட ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்க விடயமாகும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.