போதை பொருட்களுக்கு எதிரான விழிர்ப்புணர்வு பேரணி

மன்னார் நகர்  நிருபர்
 
மன்னார் பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பேரணி இன்று வெள்ளிக்கிழமை(13) காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாகச் சென்று மன்னார் மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தது.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன், சமூர்த்தி பணியாளர்கள்,சமூர்த்தி பயணாளிகள் என பலர் குறித்த விழிர்ப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்தை குறித்த விழிர்ப்பணர்வு பேரணி சென்றடைந்த நிலையில்  மன்னார் பிரதேச செயலாளர் தலைமையில் விழிர்ப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.