மன்னார் மனித புதைகுழி அகலப்படுத்தும் பணிகளின்   போதும் மனித எச்சங்கள் மீட்பு 

மன்னார் நகர் நிருபர்
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் இன்று (13) வெள்ளிகிழமை 33 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் இடபெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர். ஏ. எஸ். ராஜபக்ஸ தலைமை தாங்கிவருகின்றார் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் போசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி புதை குழி அகழ்வு பணிகள் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை குறித்த வளாகத்தின் மையப்பகுதி மற்றும் நுழைவு பகுதிகளில் மாத்திரம் அகழ்வு பணிகள் இடம்பெற்று வந்தபோதும் தற்போது ுழைவு பகுதியின் முன் காணப்படும் காணியிலும் அகழ்வுபணிகள் இடம் பெற்றது இன்று அகலப்படுத்தல் பணிகள் இடம்பெற்றபோதும் சந்தேசத்துக்குறிய மனித எச்சங்கள் மற்றும் மண்டையோடுகள் மீட்கப்படுள்ளது. தற்போது குறித்த மனித புதைகுழியில் ஒரு பகுதி அகலப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளபடுகின்றது மாறு பகுதியில் இதுவரை அகழ்வு மேற்கொண்டபோது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இடம் பெற்று கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று முப்பத்து மூன்றாவது நாள் இதுவரை 27 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 15 மனித எச்சங்கள் அடையாள படுத்தப்பட்டுள்ளதாகவும் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தெரிவித்தார். அத்துடன் குறித்த புதைகுழியில் நேற்றைய தினம் மோதிர வடிவிலான வட்ட வடிவானா ஒரு தடய பொருள் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தடய பொருளை அடையாளப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எனவே குறித்த அகழ்வு பணி நிறைவடையும் வரை எவ்வித உலோகம் எனக்கூற முடியாது எனவும் மேலும் தெரிவித்தார்.
குறித்த வளாகத்தின்அகழ்வு பணிகளை கடந்த திங்கள்கிழமை இலங்கைக்கான கனடிய தூதுவர் நேரில் பார்வையிட்டமை  குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News