வடமாகாண சபை வரவு செலவு திட்டத்திற்கு ஆளுநர் சந்திரசிறி ஒப்புதல்!

158

 

வடமாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்திற்கு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஒப்புதல் வழங்கியுள்ளதாக மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இன்i றய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் கடந்த 17ம், 18ம், 19ம் திகதிகளில் மாகாணச பையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 5 அமைச்சுக்களுக்கான பாதீடுகள் மற்றும் அவ ற்றில் செய்யவுள்ள திட்டங்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இவற்றில் குறிப்பாக வடமாகாண ஆளுநருக்கு 12கோடியே 47லட்சத்து 17ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை மற்றும் பிரமாண அடிப்படையிலான கொடுப்பனவு 60லட்சம் ரூபா நிதி ஆளுநருக்கும் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் கடுமையான

எதிர்ப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் காண்பித்திருந்த நிலையில் இறுதியாக பிராமாண அடிப்படையிலான கொடுப்பனவை நிறுத்தவேண்டும். எனவும், ஆளுநருக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு தொடர்பிலும், ஆளுநர் வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் அவரிடம் உள்ள ஆளணிகள் தொடர்பிலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். எனவும் சபையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயத்தை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கொள்வார். எனவும் முதலமைச்சரினால் சபையில் சுட்டிக்காட்டப்பட்டு குறித்த திருத்தங்களுடன் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட வரவுசெலவு திட்டம், ஆளுநரின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வரவுசெலவு திட்டத்திற்கான அங்கீகாரத்தினை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்றைய தினம் வழங்கியிருப்பதாக பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE