தமது குடும்பத்தையும் சகாக்களையும் பாதுகாத்துக்கொள்ள-ஜனாதிபதி மஹிந்த மின்கம்பங்களில் தொங்குகின்றார்- அனுரகுமார திஸாநாயக்க

170

 

mahvlcjlkj
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  மின் கம்பங்களில் தொங்குவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் தம்மை மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டிப்பார்கள் என ஜனாதிபதி பிரச்சாரம் செய்து வருகின்றார்.

எனினும், ஜனாதிபதி சகல மின்கம்பங்களிலுமே தொங்குகின்றார்.

இன்று அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கட்அவுட்களை மின் கம்பங்களில் எவ்வாறு தொங்கவிடுவது என்பது பற்றியே கணக்குப் பார்த்து வருகின்றன.

ராஜபக்ச குடும்பத்திற்கு இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியமானது.

தமது குடும்பத்தையும் சகாக்களையும் பாதுகாத்துக்கொள்ள அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

அனைத்து இன மக்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து நாட்டில் நல்லாட்சியை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முயற்சித்தால் 24 மணித்தியாலயத்தில் ஜே.வி.பி கட்சி ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் என அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

 

SHARE