வடக்கில் பிரபாகரனின் தனி நாடு இருந்திருந்தால் நீங்கள் எங்கு இருந்திருப்பீர்கள் – மஹிந்த ராஜபக்ஸ

118

 

வடக்கில் தனி ராஜ்ஜியம் அமைக்கப்பட்டிருந்தால் நீங்கள் எங்கு இருந்திருப்பீர்கள்

வடக்கில் தனி ராஜ்ஜியம் அமைக்கப்பட்டிருந்தால் நீங்கள் எங்கு இருந்திருப்பீர்கள் வடகிழக்கு என்று தனி இராஜ்ஜியம் ஒன்று உருவாகி அதில் பிரபாகரன் ஆட்சி செய்திருந்தால் இந்த முஸ்லிம் மக்களுக்கு நடந்திருக்கும் நிலை என்ன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சார நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ரணில் விக்ரமசிங்க கூறினாராம் மஹிந்த சிந்தனையில் எதுவும் செயற்படுத்தப்பட்ட விடயங்கள் இல்லை என்று. அவருக்கு தெரியவில்லை. இதில் இருப்பது நாம் செய்த வேலைகளில் பாதி மட்டுமே. நான் நினைக்கவில்லை நகர சபையினால் செய்யப்பட்ட வேலைகள் இதில் இருக்குமா என்று.

நான் நினைக்கவில்லை அவ்வாறு தனித்தனி பிரதேசங்களுக்கு இவ்வாறு பாரியதொரு மாற்றத்தை செய்ய முடியும் என்று. அந்தளவுக்கு எமது அரசாங்கம் வேலைகள் செய்துள்ளது.

நீங்கள் உங்கள் நெஞ்சில் கை வைத்து உண்மையாக சொல்லுங்கள் 2005இல் இந்த மாற்றம் நடக்கவில்லை என்றால் நீங்கள் எங்கே இருந்திருப்பீர்கள்? இந்த நாடு எப்படி இருந்திருக்கும்?

நான் முஸ்லிம்களிடம் கேட்கின்றேன் உங்களுக்கு 2005இல் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கவில்லையெனில் நான் ஜனாதிபதியாகாமல் இருந்திருந்தால் தற்போது இந்த நாட்டின் நிலை என்ன? வடக்கில் தனி ராஜ்ஜியம் அமைக்கப்பட்டிருந்தால் நீங்கள் எங்கு இருந்திருப்பீர்கள் வடகிழக்கு என்று தனி இராஜ்ஜியம் ஒன்று உருவாகி அதில் பிரபாகரன் ஆட்சி செய்திருந்தால் இந்த முஸ்லிம் மக்களுக்கு நடந்திருக்கும் நிலை என்ன?

prabhakaranMR 19_CI

முஸ்லிம் மக்கள் தமது மதத்தை வணங்கும் நேரம் மதத்தலைவர்கள் சென்று கடவுளை வணங்கி விட்டு தமது மனசாட்சியிடம் கேளுங்கள் எங்களுக்கு என்ன நடந்தது? வடக்கில் எத்தனை மணித்தியாலத்திற்குள் நாங்கள் விரட்டப்பட்டோம் என்று.  ஆனால் இவை அனைத்தும் உங்களுக்கு திரும்ப பெற்றுத்தரப்பட்டுள்ளது.

SHARE