நாற்பத்தைந்து வருடங்கள் பராமரித்து வந்த மகளை கொடூரமான முறையில் படுகொலை செய்த தாய்.

28

45 வருடங்கள் பராமரித்து வந்த மகளை மிகவும் கொடூரமான முறையில் தாயொருவர் படுகொலை செய்துள்ள சம்பவம் கம்பளை பிரதேச மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாற்றுத் திறனாளியான 45 வயது மகளை கொலை செய்து சடலத்தை குறித்த தாய் எரித்துள்ளதாக தெரியவருகிறது.கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான தாயொருவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், கடந்த 19ஆம் திகதி குறித்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேரி நோனா என்னும் 45 வயதான மாற்று திறனாளி பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கணவர் இன்றி, வலதுகுறைந்த மகளை மிக நீண்ட காலம் குறித்த பெண் மிகவும் அன்பாக பராமரித்து வந்தார் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்வெட்டியொன்றினால் மகளை தாக்கிக் கொலை செய்து, பல்வேறு பொருட்களை சடலத்தின் மேல் போட்டு குறித்த தாய் தீயிட்டு எரித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பகுதியளவில் எரிந்த சடலத்தின் இரு புறத்திலும் விளக்கு ஏற்றி இரவு முழுவதும் சடலத்துடன் குறித்த பெண் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் அடுத்த நாள் காலையில் அனைவரிடமும் மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார் இதனையடுத்து சடலத்தை பார்த்த கிராம உத்தியோகத்தர் தீ காயங்கள் காணப்படுவதனால் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் அறிவித்ததை தொடர்ந்து பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

என்ன காரணத்திற்காக இவ்வாறு மகளை கொன்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

SHARE