சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கையை பரிந்துரை செய்க! நாடு கடந்த தமிழீழ அரசு பிரிட்டிஷ் எம்பியிடம் எடுத்துரைப்பு

25
இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில்  பிரித்தானியா colchester தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Hon Will Quince அவர்களுக்கும்  நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களுக்கும் இடையில் Hythe Community Centre ல்  கடந்த 20ம் திகதி  சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
 
நா.க.த அரசின் விளையாட்டு மற்றும் சமூக நலன் பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் நெறிப்படுத்தலில்  ஊடக செயற்பாட்டாளரான சொர்ணலிங்கம் யதுர்சனின் ஒருங்கிணைப்பில் நுஜிதன் இராசேந்திரம் , குணசேகரம் ஜெயசந்திரராசா, ஆகியோர் கலந்துகொண்ட குறித்த சந்திப்பில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனைகள் , அரசியல் கைதிகளின் சமூக இணைப்பு , தமிழர் பகுதிகளில் தற்போது நடைபெற்றுவரும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் போன்றவை கலந்துரையாடப்பட்டன.
 
மேலும் .சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கையை பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்பட்டதுடன் எதற்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது பற்றிய மனு கையளிக்கப்பட்டதுடன் ஐ. நா  மனித உரிமை சபையினால் கொண்டுவரப்பட்ட 30/1 ,34/1 தீர்மானங்களானது   எந்தளவிற்கு இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது என்பது பற்றி ஆராயப்பட்டு அது  தொடர்பான (TGTE MAP )அறிக்கையும் வழங்கப்பட்டது.  அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் இந்த விடயம் தொடர்பாக கேள்வி முன்வைப்பதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE