வாழைச்சேனை இளைஞர் கழக கால்பந்தாட்ட அணியினருக்கான சீருடை வழங்கல்

21

(Dilan Maha)

வாழைச்சேனை இளைஞர் கழக கால்பந்தாட்ட அணியினருக்கான விளையாட்டுச் சீருடை இன்று வழங்கி வைக்கப்பட்டது.

கால்பந்தாட்ட அணி தலைவர் எஸ்.மிலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேலும் சமூகசேவையாளர் எஸ்.பரராஜசேகரம், கழக ஸ்தாபகர் எஸ்.நவரெட்ணராஜா உட்பட கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை இளைஞர் கழக கால்பந்தாட்ட அணியினர் தங்களது விளையாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு போதிய விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை இன்மை காணப்படுவதாக உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வகையில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் ஜேர்மன் நாட்டில் வசிக்கும் ராஜ் விக்கி என்பவரிடம் விடுத்த வேண்டுதலின் அடிப்படையில் வழங்கிய பண உதவி மூலமும்;, பிரதேச சபை உறுப்பினரின் மூன்றாம் மாத சம்பளத்தில் இருந்து சிறு தொகைப் பணத்தின் மூலமும் பதின்நான்கு சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

விளையாட்டுக் கழகத்தினரின் வேண்டுகோளின் அடிப்படையில் உதவிகளை வழங்கிய புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ராஜ் விக்கி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருக்கும் கழகத்தினர் நன்றிகளை தெரிவித்தனர்.

SHARE