மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றை வழங்க மாகாண சுகாதார அமைச்சர் இணக்கம்

37
(நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு) 

எனது கோரிக்கைக்கு அமைய மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றை வழங்க மாகாண சுகாதார அமைச்சர் இணக்கம் – ம.மா.ச உறுப்பினர் ஆர்.ராஜாராம்.

எனது கோரிக்கையை எற்றுக் கொண்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வழங்குவதற்கு மத்திய மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் பந்துல யாலேகம இனக்கம் தெரிவித்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஊடகங்களுக்கு இன்று (17.07.2018)தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபையின் மாதாந்த கூட்டம் நேற் (17.07.2018) கண்டி பல்லேகலை மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்றது.மத்திய மாகாண சபை தலைவர் பீ.டி.எல் நிமலசிரி தலைமையில் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன.இது தொடர்பாக பொது மக்கள் என்னிடம் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.நான் இது தொடர்பாக இன்று (17.07.2018) நடைபெற்ற மாதாந்த மாகாண சபை கூட்டத்தில் குறைபாடுகளை சுட்டிக் காட்டினேன்.
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் நாளாந்தம் 300க்கும் அதிகமான வெளி நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றார்கள்.இவர்களுக்கு உரிய மறையில் சிகிச்சைகளை வழங்க முடியாமல் வைத்தியசாலை நிர்வாகம் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்கள்.அது மட்டுமல்லாமல் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வருகின்ற நோயாளர்களை அங்கு தங்கி சிக்ச்சை பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர்களை டிக்கோயா கிளன்கன் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு வைத்திசாலை நிர்வாக்கதினரால் கேட்கப்படகின்றார்கள்.இதன் காரணமாக நோயாளர்கள் பல மைல் தூரம் பேருந்தில் பிரயாணம் செய்து அதன் பின்னரே டிக்கோயா கிளன்கன் வைத்தியசாலையில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.இதன் காரமணாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெறும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள்.
நேயாளியுடன் வருகை தருகின்றவர்கள் ஒரு நாள் தங்களுடைய தொழிலையும் பணத்தையும் இலக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக தொழிலாளர்கள் பெறும் பொருளாதார சிக்கல்களையும் சந்திக்கின்றார்கள்.இந்த வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ் வசதிகள் முறையாக இல்லாமையின் காரணமாக நிர்வாகமும் நோயாளர்களும் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள்.எனவே இது தொடர்பாக இன்று (17.07.2018) நடைபெற்ற மாகாண சபை அமர்வின் பொழுது மத்திய மாகாண சபையின் சுகாதாரத்துறை அமைச்சர் பந்துல யாலேகமவின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.இதன்போது எனக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர்.மிக விரைவில் மத்திய அரசாங்கத்தின் மூலமாக ஆம்புலன்ஸ் வண்டிகள் மத்திய மாகாண சபைக்கு வழங்கப்படவுள்ளது.அதில் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியை பெற்றுத் தருவதாக தெரிவித்ததுடன்.மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர்கள் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்வதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் என்னிடம் தெரிவித்ததாகவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
SHARE