காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குரிய இடம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவிப்பு

17

கொழும்பு, காலி முகத்திடலில் உள்ள இராணுவ தலைமையகம் அமைந்துள்ள இடம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள பகுதி சீனாவுக்கு முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சீனாவின் ஷெங்கிரிலா நிறுவனத்திற்கே இவ்வாறு சொந்தமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் நாட்டின் ஒரு சிறிய பகுதியேனும் வேறு நாட்டிற்கு சொந்தமாக வழங்கப்படவில்லை என மஹிந்த ஆட்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இராணுவம் தலைமையகம் விற்பனை செய்தமைக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தை ஊடகமொன்று பகிரங்கப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE