இந்தியரிடமிருந்து எண்ணூற்றாறு கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்பு

17

ஐஸ் ரக போதைப்பொருளை கடத்தி வந்த இந்தியர் ஒருவரை பண்டாரநாயக்க விமான நிலைய அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

சுமார் 9.6 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரிலிருந்து வந்த குறித்த இந்தியரிடமிருந்து 806 கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 50 வயதான குறித்த இந்தியரிடம் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE