இரணைமடுவில் ஐயாயிரம் சிங்கள இராணுவத்தினரை குடியேற்றுவதற்கான முழு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

36

இரணைமடு பகுதியில் 5000 சிங்கள இராணுவத்தினரை குடியேற்றுவதற்கான முழு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், வட மாகாண மக்கள் ஒருவருட காலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் எனவும், தங்களின் நிலங்களை விடுவிக்குமாறு கூறி மற்றொருபுறம் நிலங்களின் உரிமையாளர்களும் முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இராணுவம் 92 வீதம் காணிகளை விடுவித்திருந்தால் மக்களின் காணிகள் அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே முழுமையான ஒரு பொய்யை இராணுவம் சொல்கின்றது. இரணைமடு தெற்கு புறமாக இராணுவ குடியிருப்பு மிக துல்லியமாக இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் 5000 சிங்கள இராணுவத்தினரை குடியேற்றுவதற்கான முழு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE