நடிகைகளுக்கு போட்டியா? சமந்தாவின் பதில் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

32

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என தொடர்ந்து நடித்து வருகிறார். திருமணத்திற்க்கு பிறகும் அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வருகின்றன. பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் பேசியுள்ள அவர் சினிமாவில் நடிகைகளுக்கு நடுவில் போட்டி உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

“ஹீரோயின்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும், ஊக்குவிக்க வேண்டும். ஒற்றுமைதான் பலம்” என சமந்தா ட்விட்டியுள்ளார்.

இந்த பதில் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

SHARE