மயானத்தில் தனித்து விடப்பட்ட பெண்! உறவினர்களின் மோசமான செயல்

39

மாதம்பேயில் வயோதிப பெண்ணொருவரை உறவினர்கள் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

பனிரென்தாவ பொது மயானத்தில் 70 வயதான பெண் ஒருவரை உறவினர்கள் தனித்து விட்டு சென்றுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேச மக்கள் இணைந்து அந்த வயோதிப பெண்ணை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் மயானத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்திற்கு பெண் ஒருவர் உள்ளதாக, பொதுமக்கள் பொலிஸாரிடம் அறித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரால் அவர் இவ்வாறு விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு விட்டு செல்லப்பட்டவரின் அடையாளம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

பிரதேச மக்கள் அந்த பெண்ணுக்கு ஆடை மற்றும் தேவையான பொருட்களை வழங்கியுள்ளனர்.

மாதம்பே பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கல்முருவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பெண் யார் எனவும், மயானத்தில் விட்டு சென்றது யார் என்பது தொடர்பிலும் மாதம்பே பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

SHARE