தந்தையொருவரின் கொடூர செயல்! மூன்று வயது மகனுக்கு நேர்ந்த விபரீதம்

32

குளியாப்பிட்டி பிரதேசத்தில் மூன்று வயதான மகனை கால் உடையும் வரையில் தாக்கிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி நீதவான் ருவான் தம்மிக்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

மூன்று வயதும் ஒன்பது மாதங்களுமான காயமடைந்த சிறுவனின் தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து தந்தையை பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் ஆயுர்வேத சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

என்ன காரணத்திற்காக சிறுவனை அவனது தந்தை தாக்கி காலை உடைத்தார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

சிறுவன் தொடர்பிலான மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

SHARE