அஜித்தின் விசுவாசம் படத்தில் இப்படிபட்ட ஒரு பாடல் இருக்கிறதா?

65

சிவா அஜித்தை வைத்து இயக்கிய படங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது வீரம் படம் என்றே கூறலாம். கிராமத்து பின்னணியில் அஜித் நடித்த அப்படத்தை போல் மீண்டும் அதுபோன்ற ஒரு கதைக்களத்தில் அஜித் நடிக்க ரசிகர்கள் ஆசைப்பட்டனர்.

அந்த ஆசை விசுவாசம் படத்தின் மூலம் நிறைவேறப்பட்டு வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் போட்டு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் கரகம் எல்லாம் வைத்து ஆடக் கூடிய நடன கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனராம். அவர்கள் இடம்பெற தரமான ஒரு நாட்டுப்புற பாடல் படமாக்கப்பட்டுள்ளதாம்.

இதோ பாருங்க அஜித்துடன் இருக்கும் அந்த நடன கலைஞர்கள்

SHARE