கறுப்பு ஜீலை நினைவு தினமன்று பரபரப்பை ஏற்படுத்திய வரிகள்!

74

“நித்திரையா தமிழா” என்ற புலிகளின் பாடல் வரிகள் வீதியொன்றில் எழுதப்பட்ட விவகாரம் வவுனியா பூம்புகார் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Black July Vavuniya Song

நேற்றிரவு வேளையில் இவ்வரிகள் எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதனால் குழப்பமடைந்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் மக்களுடன் கலந்துரையாடலொன்றையும் பொலிஸார் நடத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து எழுதப்பட்ட பாடல் வரிகளை மக்களே அழித்துள்ளனர்.

இதேவேளை இன்று கறுப்பு ஜூலை நினைவு தினம் என்பதால், இப்பாடல் வரிகள் எழுதப்பட்ட நோக்கம் என்ன என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

 

 

 

 

SHARE