கனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்

26

கனடாவின் டொரன்டோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் உட்பட இருவர்  கொல்லப்பட்டுள்ள அதேவேளை 15ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

டொரன்டோவின் கன்போர்த் மற்றும் லோகன் அவன்யூ பகுதிகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளம் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இது வரை தெரியவராத அதேவேளை காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற வேளை அப்பகுதியில் குடும்பத்தினருடன் உணவகத்தில் காணப்பட்ட நபர் ஒருவர்  15 வெடிப்புசத்தங்கள் கேட்டன அவை பட்டாசு போல சத்தங்கள் தென்பட்டன பின்னர் மக்கள் அலறத்தொடங்கினர்  என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

SHARE