அனர்த்தங்களின்போது உதவக்கூடிய சிறிய ரக ரோபோ உருவாக்கம்

45

பாதுகாப்பு தொடர்பான இலத்திரனியல் உபகரணங்களை உருவாக்கும் DARPA (Defence Advanced Research Projects Agency) நிறுவனம் புதிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது.

மிகவும் நுண்ணிய அளவுடையதாக இருக்கும் இந்த ரோபோவினை அனர்த்தங்களில் இருந்து இலகுவாக மீள்வதற்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHRIMP என அழைக்கப்படும் இந்த ரோபோ மனித விரலை விடவும் சிறியதாக காணப்படுகின்றது.

இதனை மேம்படுத்தும் பணிகளில் தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் அளவில் இந்த ரோபோக்களை பணிக்கு அமர்த்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE