நாடகப்போட்டியில்  தேசிய ரீதியில் மன்னார் அல்.அஸ்ஹர்  முதலாம் இடம்

25
-மன்னார் நகர் நிருபர்-
அகில இலங்கை தமிழ் தின நாடகப்போட்டியில்  தேசிய ரீதியில் மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை  முதலாம் இடத்தைப்பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கொழும்பில் கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை    நடை பெற்ற நாடகப்போட்டியிலேயே  முதலாம் இடத்தினைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
வடமாகாணத்தில் இருந்து மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை ஏனைய 08 மாகாணங்களுடன் போட்டியிட்டு இச்சாதனையினை  நிலை நாட்டியுள்ளனர்.
‘சமூக விழிப்புணர்வு’ நாடகத்தில் மன்னார் மாவட்டமும் வடமாகாணமும் தேசிய ரீதியில் முதலாமிடத்தினை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
2018 நடந்த தமிழ் தினப்போட்டியில் மன்னார் வலைய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் சமூக நாடகத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை பெற்றிருந்தது.
மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை வட மாகாணத்தில் நாடகப்போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டதுடன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது இதுவே முதல் தடைவ என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE