குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் தனுஸ்க

26

இலங்கை கிரிக்கெட்டினால் சகலவகை போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக தான் குற்றம் எதனையும் இழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தனது ஹோட்டல் அறையில் இடம்பெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பிலேயே தனுஸ்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

தனுஸ்க குணதிலக தன்மீது குற்றமில்லை என தெரிவித்துள்ளார் மேலும் நாங்கள் அவர் குறித்து விசாரணைகளை தொடரப்போவதில்லை என பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அணிக்கான விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விசாரணைகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நோர்வே பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய தனுஸ்கவின் நண்பரை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளோம்,இது பிணையில்விட முடியாத குற்றம் எனவும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தனுஸ்கவின் நண்பர் இங்கிலாந்தில் கழகமொன்றிற்கு விளையாடுபவர் தனது தந்தையை பார்ப்பதற்காக இலங்கை வந்திருந்தவேளை அவர் இந்த குற்றத்தை புரிந்துள்ளார் எனவும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

SHARE