ஜனாதிபதி, பிரதமரை நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் உத்தரவு

21

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

ஐக்கிய தேசிக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாகவே  ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE