பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எண்ணெய்யில் செய்யப்பட்ட சிற்றுண்டிகளுக்குப் பதிலாக பழவகைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மா மற்றும் எண்ணெய் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளை வழங்குவதற்குப் பதிலாகவே பழங்கள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை அண்மித்த இடங்களில், மா மற்றும் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனைத் தடுப்பதற்காக பதப்படுத்தப்பட்ட பழங்களைப் பாடசாலைக் கட்டமைப்பில் அறிமுகப்படுத்துவது சிறந்ததெனவும் அதிகாரிளுக்குச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், பாடசாலை மாணவர்களுக்கு முன்னுதாரணமாகப் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவையில் இதனை முதலில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.