
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடனானஇன்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக்கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டுள்ளார் .
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனிப்பட்டஅரசியல் அபிலாசைகளுக்காகவோ பதவிகளைபெற்று ஆசனங்களை சூடாக்கிக்கொண்டிருப்பதற்காகவோ அரசியலில் பிரவேசித்தகட்சியல்ல.
தம்மை ஆகுதியாக்க துணிந்த இளைஞர்களின்தியாகத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. அதன்விளைவால்தான் எந்தவித சட்ட வல்லுனர்களோஅரசியல் முன் அனுபவமோ இல்லாத போதும் 2008தொடக்கம் 2012 வரை கிழக்கு மாகாண மக்களை நாம்நேசித்ததன் வெளிப்பாட்டை மக்கள் நேரடியாகஉணர்ந்துள்ளனர்.
அதுவே பல தசாப்தங்களாக அரசியலில் பயணிக்கும்பல கட்சிகளுக்கு இணக்க அரசியல் மற்றும்மக்களுக்கான அரசியலின் தன்மைகளை கற்பித்துக்கொடுத்துள்ளது.
2008ஆம் ஆண்டு மாகாணசபை முறைமை வேண்டாம்என்ற பலரை 2012ஆம் ஆண்டு மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு தாக்கத்தினைஏற்படுத்தியிருந்தமை யினை மக்கள் இன்றும் நினைவுகூருகின்றார்கள்.
எமது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனினால்நடாத்தப் பட்ட மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திப்பணிகளையும் நிதி, நிர்வாக, சமத்துவப் பங்கீட்டுஆட்சியினை விடவும் சிறப்பாக ஆட்சி நடத்துவோம்,கிழக்கில் தேனாறும் பாலாறும் ஓட வைப்போம் என்றுஆட்சி பீடம் ஏறிய தலைமைகள் என்ன செய்தார்கள்என்பதுவும் வெளிப்படையானதே.
எமது கட்சியின் தலைவர் கடந்த 1018 நாட்களுக்குமேலாக மட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதும் அவரின் தலைமையினைமக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுஉள்ளூராட்சி சபைத் தேர்தல் பறைசாற்றி நிற்கின்றது.
இன்றைய சூழலில் கிழக்கின் தமிழர்களின் அரசியல்பாதைக்கு சி.சந்திரகாந்தனின் தலைமைத்துவம்அவசியமானது என்பதனை யாரும் மறுக்க முடியாது.
அதேபோன்று நாம் உயிர் மூச்சாக நேசிக்கும் கிழக்குதமிழரின் நலனுக்காக எந்த விட்டுக் கொடுப்புடனும்பயணிக்க எமது கட்சி தயாராக உள்ளது.
கிழக்கு மாகாண தமிழர்களை ஏமாற்றி நில, நிதி,நிர்வாக, அரசியல் ரீதியாக யார் ஆதிக்கம் செய்துஅடக்க முற்பட்டாலும் அவர்களுக்கெதிராக ஜனநாயகரீதியாக போராடவும் நாம் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
(Dilan Maha)