ஜயா சம்பந்தன், மாத்தையா மகிந்தவிடம் என்ன கேட்டிருப்பார் என்பதை யாரும் தெரிந்தவர்கள் இருந்தால் கொஞ்சம் யோசித்து சொல்லமுடியுமா??

27

 

ஜயா சம்பந்தன், மாத்தையா மகிந்தவிடம் என்ன கேட்டிருப்பார் என்பதை யாரும் தெரிந்தவர்கள் இருந்தால் கொஞ்சம் யோசித்து சொல்லமுடியுமா???

இப்படி கேட்டிருப்பாரோ??? தம்பி மகிந்தா இந்த சர்வதேச விசாரணை, மின்சார கதிரை எல்லாவற்றையும் நானும் எனது சிஷ்யப்பிள்ளை சுமந்திரனும் சேர்ந்து, எங்கட முட்டாள் தமிழ் சனத்தை நல்லாட்சி அரசாங்கம் அமைத்து தீபாவளிக்கு இடையில் தீர்வு வாங்கி தாரம் எண்டு சொல்லி வாக்கினை வாங்கி நல்லாட்சி என்ற லேபலுடன் ஒரு அரசையும் அமைச்சு நானும் எதிர் கட்சி பதவியை பிடிச்சிட்டன் உவன் தம்பி சுமந்திரனும் வெளிநாடுகள் எல்லாம் போய்திரிந்து இப்ப எங்களுக்கு பிரச்சனை இல்லை நாங்கள் சமம் புலிகள் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்டு சொல்லி சர்வதேச விசாரணையை குழப்பி உம்மை காப்பாத்திட்டான் ஆனால் நீர் அந்த கொமிசனை இன்னும் வெட்டவில்லை எப்ப வெட்டபோறீர் என்று கேட்டிருப்பாரோ??

ச்சீ ச்சீ அப்படி கேட்க ஜயாவிடம் என்ன பணமா இல்லை அப்படி என்றால் என்ன சொல்லி இருப்பார் ??

ஓ!!! இதைத்தான் சொல்லி இருப்பார், எனக்கும் வயசு போட்டுது இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் நீர் ஒன்றுக்கும் கவலை படாதீர் எங்கட சனத்திற்கு அறிவு இல்லை நான் எதை சொன்னாலும் நம்பும் இந்த முறை இந்த அரசியல் யாப்பை உருட்டி விட்டு உமது தம்பியை ஜனாதிபதி ஆக்கிதாரது எனது பொறுப்பு ஆனால் நீர் நான் சாகும் போது உந்த பிரதமர் கதிரையில் இருந்து செத்தால் கொஞ்சம் கௌரவமாக இருக்கும் .என்ற ஆசையை எப்படியாவது நிறைவேற்றி போடும் அப்படியே உவன் தம்பி சுமந்திரனுக்கும் அந்த வெளிவிவகார அமைச்சை கொடுத்தால் உமக்கும் பாதுகாப்பு ?

மகிந்த மாத்தையாவின் நமட்டு சிரிப்பை பார்த்தால் ஜயா சம்பந்தன் இதை தான் சொல்லியிருப்பார் என நினைக்கின்றேன்

உங்களுக்கு ஏதாவது தோன்றி இருந்தால் படம் பார்த்து கதை சொல்லவும் தயவு செய்து யாரும் சிரிக்க வேண்டாம் கொஞ்சம்
கொஞ்சம் சிந்திப்போம்

SHARE