றெக்க கட்டி பறக்குது மனசு சீரியலில் இருந்து வந்தனா இதனால் தான் விலகினாரா?

26

பிரபல தொலைக்காட்சியில் றெக்க கட்டி பறக்குது மனசு என்ற சீரியல் மிகவும் பிரபலம். பொதுவாக சீரியல்களில் சின்ன சின்ன வேடத்தில் நடிப்பவர்கள் மாறினால் பெரிதாக தெரியாது.

ஆனால் முக்கிய வேடத்தில் நடிக்கும் உதாரணத்துக்கு நாயகி, வில்லி நடிகர்கள் மாறினால் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் ஏற்க மாட்டார்கள்.

அப்படி இந்த சீரியலில் வில்லியாக நடித்து எல்லோரையும் கவர்ந்திருப்பவர் வந்தனா. இவரின் கதாபாத்திரத்தில் இப்போது வேறொருவர் நடிக்கிறாராம்.

இதுகுறித்து வந்தனா ஒரு பேட்டியில், சீரியலில் கமிட்டாகும் போதும் எனக்கான சில விஷயங்களை கூறி தெளிவுபடுத்திய பிறகு தான் கமிட்டாவேன். இந்த சீரியலில் தயாரிப்பு நிறுவனம் மீது இருந்த அதிருப்தியால் தான் வெளியே வந்துள்ளேன். சரியாக சம்பளம் கொடுப்பதில்லை, பிரச்சனைகளை கூறினால் கவனிப்பதில்லை இதனால் தான் வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார்.

றெக்க கட்டி பறக்குது மனசு சீரியலுக்கு அதில் நாயகியாக நடிக்கும் சமீரா ரெட்டி தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE