ஊழியர்களை குறைக்கும் ‘நியூயோர்க் டெய்லி நியூஸ்’

25

புலிட்ஸர் விருதுகள் பலவற்றைவென்ற அமெரிக்க பத்திரிகையான “நியூயோர்க் டெய்லி நியூஸ்” தனது ஆசிரியர் பீட ஊழியர் தொகையை அரைப் பங்காக குறைத்துள்ளது.

இது உள்ளூராட்சி செய்தி வர்த்தகத்திலான பிரச்சினை தொடர்பான பிராந்திய அடையாளமாக நோக்கப்படுகின்றது.

நியூயோர்க் நகரில் வெளியாகும் இரு சிறுபக்க பத்திரிகைகளில் ஒன்றான மேற்படி பத்திரிகையில் மேற்கொள்ளப்பட்ட ஊழியர்கள் குறைப்புக் காரணமாக செய்தி அறையில் 40 பேரே எஞ்சியிருக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பத்திரிகை இதுவரை 11 புலிட்ஸர் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE