65 மில்லியன் பவுண்டுக்கு விலை போகாத வில்லி

32

பார்சிலோனா கால்பந்தாட்ட அணி 65 மில்லின் பவுண்ட் கொடுத்து செல்சி அணியின் வீரர் வில்லியனை வாங்க விருப்பம் தெரிவித்தது, இருப்பினும் பார்சிலோனா அணி அதனை நிராகரித்துள்ளது.

பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி மிட்பீல்டர் வில்லியன். இவர் இங்லீஷ் பிரீமியர் தொடரில் செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ‘லா லிகா’ புகழ் பார்சிலோனா அணி வாங்க விருப்பம் தெரிவித்து செல்சி அணிக்கு தூதுவிட்டது. இருப்பினும் செல்சி அணியினர் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.

இது தொடர்பில் செல்சி அணியினின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மவுரிசியோ குறிப்பிடுகையில்,

வில்லியனை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லை. இதனால் 65 மில்லியன் பவுண்ட்டை நிராகரித்து விட்டோம். ஒருவேளை 70 மில்லியன் பவுண்ட் கொடுத்தால் அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்வது தொடர்பாக யோசிப்போம் என்றார்.

29 வயதாகும் வில்லியன் கடந்த 2013 ஆம் ஆண்டியிலிருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 166 போட்டிகளில் விளையாடி 25 கோல் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE