பாதுகாப்பு அமைச்சினால் கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் அரசியல்வாதிகளுக்கு என 30 துப்பாக்கிகள் புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆண்டில் முதல் காலாண்டில் 14 துப்பாக்கிகளும் இரண்டாம் காலாண்டில் 5 துப்பாக்கிகளும் மூன்றாம் காலாண்டில் 9 துப்பாக்கிகளும் இறுதிக் காலாண்டில் 2 துப்பாக்கிகளும் இவ்வாறு அரசியல்வாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகபுள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எவ்வாறாயினும் கடந்த வருடம் 223 அரசியல்வாதிகளின் துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்த போதிலும் அதில் 71 பேர் மட்டுமே தமது அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைவிட கடந்த வருடத்தில் அரசியல்வாதிகளைத் தவிர உயிர், சொத்து பாதுகாப்புக்கு என 0.38 மற்றும் 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கிகள் 78 புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனைவிட கடந்த ஆண்டு 1450 வாயு ரைபிள்களும் பாதுகாப்பு அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.