மியன்மாரில் சுரங்கம் இடிந்ததில் 27 பேர் பலி

21

மியன்மார் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்ட பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மியன்மார்  நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள காசின் மாகாணத்திலுள்ள சுரங்கங்கள் தான் சுமார் 70 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளன.

குறித்த நிலையில் அங்கு செட் மூ என்ற இடத்தில் உள்ள மாணிக்க கல் சுரங்கத்தில் நேற்றுமுன்தினம் தொழிலாளர்கள் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெய்த மழையினால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

குறித்த சுரங்கத்தில் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். அவர்கள் அனைவரும் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE