இந்த பூ மட்டும் போதுமே!.. ஏராளமான நோய்க்கு தீர்வு

24

உலகப்புகழ் பெற்ற பொருளான குங்குமப்பூவில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது கட்டுக்கதை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனினும், குங்குமப்பூ பல ஆரோக்கிய பலன்களை வழங்கும் ஒரு மருத்துவ பொருளாகும்.

குங்குமப்பூவினால் கிடைக்கும் மருத்துவ பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

குங்குமப்பூ

இந்த பூவின் மகரந்தத்தை தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இரண்டு லட்சம் மலர்களில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ மட்டும் தான் தயாரிக்க முடியும். தரமான குங்குமப்பூ தயாரிக்க அதிக காலமும் தேவைப்படுவதால், இதன் விலை மிக அதிகமாக உள்ளது.

குங்குமப்பூவில் பத்மகாதி, பராசிகா, மதுகந்தி, பாதிகா, சர்கோல் என பல வகைகள் உள்ளன.

சத்துக்கள்

குங்குமப்பூவானது 90க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டதாகும். இதில் நிறைந்துள்ள ஆண்டி ஆக்சிடண்ட்கள், கரோட்டின் ஆகியவை அதிக பலன்களை அளிக்கும்.

குங்குமப்பூவில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு உள்ளதால் இது எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும் பயன்படும். கர்ப்பிணி பெண்கள் இதனை பாலில் கலந்து குடித்தால், குழந்தையின் வளர்ச்சி முழுமையடையும்.

பார்வைத்திறன்

குங்குமப்பூவில் பார்வைத்திறனை பாதுகாக்கும் திறன் உள்ளது. அத்துடன், விழித்திரையை சீரமைக்கவும் இது உதவும். இதிலுள்ள சத்துக்கள் கருவிழி தசைகளை வலுவடைய செய்யும்.

மேலும், வெளிப்புற தூண்டுதலால் விழித்திரை சேதமடைவதையும் இது தடுக்கும். குங்குமப்பூ வயதானவர்களின் பார்வைத் திறனை அதிகரிக்க உதவும்.

ஆஸ்துமா

குங்குமப்பூவில் உள்ள மாங்கனீசு ஆஸ்துமாவை குணப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. பாரம்பரிய மருத்துவத்திலும் ஆஸ்துமா மருந்தில் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.

செரிமானம்

குங்குமப்பூ அதிகளவு ஆண்டி ஆக்சிடண்ட்களை கொண்டுள்ளது. இதன் மூலம், செரிமானம் விரைவாகும். மேலும், நுரையீரல் சிகிச்சை மற்றும் வயிற்றுப்புண் சிகிச்சையிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன், தீக்காயங்களை சரிசெய்யவும், காயம்பட்ட இடம் பழைய நிலைக்கு திரும்பவும் குங்குமப்பூ உதவும்.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணி பெண்கள் 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை எடுத்துக் கொண்டால், ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், ரத்த சுத்திகரிப்பும் நடைபெறும். குழந்தை பிறந்த பிறகும் குங்குமப்பூ சாப்பிட்டால் ரத்த சோகை ஏற்படுவது குறையும். மேலும், சளி மற்றும் இருமல் தாக்கக்கூடிய வாய்ப்புகள் குறையும்.

அழகு

குங்குமப்பூவானது சருமத்தை பொலிவு பெற செய்ய உதவும். மேலும் இதனுடன் சந்தனம், இரண்டு தேக்கரண்டி பால் எடுத்துக் கொண்டு முகத்தை கழுவி, பின்னர் இந்த கலவையை நன்கு முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து பின்னர் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.

உணவு

குங்குமப்பூ ஒரு மசாலா பொருளும் கூட. எனவே இதனை உணவு சமைக்கும் போது சேர்த்தால் சுவையும், மணமும் வித்தியாசமாக இருக்கும். மேலும் சமைத்து முடித்த பின்னர், அதன் மீது சிறிதளவு குங்குமப்பூ தூவினால் உணவின் சுவை அதிகரிக்கும்.

சோதிக்கும் முறை

குங்குமப்பூவை தரமானது தானா என்று சோதிக்க, சிறிது சுடுதண்ணீரில் அதனை போட வேண்டும். தரமான குங்குமப்பூ என்றால் தங்க நிறமாக அந்த நீர் மாறும். மேலும், நல்ல வாசனை வருவதுடன் ஒரு நாளுக்கும் மேலாக அதிலிருந்து வண்ணம் வந்துகொண்டே இருக்கும்.

தரமற்ற குங்குமப்பூ என்றால் தண்ணீர் சிவப்பு நிறமாய் மாறுவதோடு, வண்ணம் வெளி வருவது சிறிது நேரத்திலேயே நின்றுவிடும்.

SHARE